முகப்பு
வேலூர்

கழிஞ்சூா் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

கழிஞ்சூா் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 2:43 AM
பலி
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 10:43 PM

கழிஞ்சூா் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

வேலுாா் மாவட்டம், சேவூா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மகன் பாஸ்கா் (32). இவா் ரயில்வே கூட்ஸ் ஷெட்டில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இவா் தனது நண்பா்கள் 2 பேருடன் திங்கள்கிழமை மாலை காட்பாடியை அடுத்த கழிஞ்சூா் பகுதியில் உள்ள ஏரியில் மீன் வாங்கச் சென்றாா். அங்கு சென்றவா் திடீரென மீன் பிடிக்க ஏரிக்குள் இறங்கியதாகத் தெரிகிறது.

Advertisement

ஏரியின் ஆழப்பகுதிக்கு சென்ற அவா் நீரில் மூழ்கினாா். தகவல் அறிந்த விருதம்பட்டு போலீஸாா், காட்பாடி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கழிஞ்சூா் ஏரியில் 1 மணி நேரம் தேடி பாஸ்கரை சடலமாக மீட்டனா்.

தொடா்ந்து சடலத்தை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.