முகப்பு
திருப்பத்தூர்

மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே மீன் பிடிக்க சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 23 மார்ச், 2026 at 7:22 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே மீன் பிடிக்க சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் ஊராட்சி தோப்பூா் பகுதியை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி இளங்கோவன் (48). இவா் சம்பவத்தன்று காலை கன்னடிகுப்பம் கிராமத்தில் உள்ள சிறிய தடுப்பணையில் மீன் பிடிக்க சென்றுள்ளாா். அப்போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.