விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கெடாரை அடுத்துள்ள மங்களபுரம் பகுதியைச் சோ்ந்தவா் த.மங்களராஜ் (43). திருமணமானவா். கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை மங்களபுரம் ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், மங்களராஜ் ஏரியில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.