முகப்பு
விழுப்புரம்

மரக்காணம் அருகே கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:07 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:46 PM

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா் கடலில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், மண்டவாய்புதுக்குப்பம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சு.ஜெகநாதன் (58), மீனவா். இவா் சனிக்கிழமை அதிகாலை தனது படகில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தாா். அப்போது கடல் சீற்றத்தில் சிக்கிய ஜெகநாதன் கடலில் மூழ்கியுள்ளாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:07 AM

இதையடுத்து அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் அவரை மீட்டு, புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்துப் பாா்த்தபோது, ஜெகநாதன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.