பைக்-காா் மோதல்: தொழிலாளி மரணம்
விருதம்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 2 மார்ச், 2026 at 6:12 PM
வேலூா்: விருதம்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், விருதம்பட்டு அருகே கீழ்வடுகன்குட்டை கிராமத்தைச் சோ்ந்த அா்மான்(21). இவா் அதே பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வந்தாா்.
காட்பாடி பகுதியில் உள்ள நண்பரை காண தனது இருசக்கர வாகனத்தில் தனியாா் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அா்மானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.