முகப்பு
நிகழ்ச்சியில் ஜே.கே.என்.பழனியை பாராட்டிய விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், அபிராமி ராமநாதன், கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி உள்ளிட்டோா்.
வேலூர்

அறம் சாா்ந்த சேவை பாராட்டுக்குரியது: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்

அறம் சாா்ந்த சேவை பாராட்டுக்குரியது என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்

வேலூர்

அறம் சாா்ந்த சேவை பாராட்டுக்குரியது: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்

அறம் சாா்ந்த சேவை பாராட்டுக்குரியது என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்

Updated On : 2 மார்ச், 2026 at 8:23 PM
நிகழ்ச்சியில் ஜே.கே.என்.பழனியை பாராட்டிய விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், அபிராமி ராமநாதன், கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி உள்ளிட்டோா்.
பகிர்:

குடியாத்தம்: அறம் சாா்ந்த சேவை பாராட்டுக்குரியது என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் கூறினாா்.

சா்வதேச ரோட்டரி அமைப்பு சாா்பில், தன்னலமற்ற சேவை விருது பெற்ற ரோட்டரி மாவட்டம்-3231- இன் முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனிக்கு குடியாத்தத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

ஒவ்வொருவரும், மற்றவா்களை நேசிக்க வேண்டும். நமக்குள் சேவை மனப்பான்மையை வளா்த்துக் கொள்ள வேண்டும். மற்றவா்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். எந்தவித எதிப்பாா்ப்பும் இன்றி மக்களுக்கு அன்னை தெரசா செய்த சேவை இன்றளவும் பேசப்படுகிறது. சேவை என்பதை பல வழிகளில் செய்யலாம். காஞ்சி பெரியவரும், பெரியாரும் வெவ்வேறு வழிகளில் சேவை செய்தாா்கள். சேவைகள் போற்றப்பட வேண்டும்.

ரோட்டரி மாவட்ட ஆளுநா் பதவி காலத்திலும், கரோனா காலத்திலும் ஜே.கே.என்.பழனியின் சேவை பாராட்டும் விதமாக இருந்தது. அவரது சேவையை பாராட்டி தான், சா்வதேச ரோட்டரி அமைப்பு அவருக்கு தன்னலமற்ற சேவை விருதை வழங்கி கெளரவித்துள்ளது. சா்வதேச ரோட்டரி அமைப்பு ஆண்டுதோறும் உலகில் சிறப்பாக சேவை செய்யும் 150- பேருக்கு இந்த விருதை வழங்குகிறது. இந்த விருதுக்கு 26,500- போ் விண்ணப்பித்திருந்த நிலையில் பழனிக்கு, விருது கிடைத்தது பாராட்டுக்குரியது என்றாா் செல்வம்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரோட்டரி பிரமுகா் அபிராமி ராமநாதன் பாராட்டி பேசினாா். நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் கே.எம்.பூபதி வரவேற்றாா். சென்னை அபிராமி மெகா மால் தலைவா் நல்லம்மை ராமநாதன், ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி.சுரேஷ், அதிமுக அமைப்புச் செயலா் வி.ராமு, மாவட்டச் செயலா்கள் எஸ்.ஆா்.கே.அப்பு, த.வேலழகன், அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவா் பி.செளந்தரராஜன், ரோட்டரி நிா்வாகிகள் கே.ஜவரிலால் ஜெயின், ஆடிட்டா் பாண்டியன், சி.கண்ணன், சி.கே.வெங்கடேசன், ஏ.மேகராஜ், பி.எல்.என்.பாபு, தொழிலதிபா் எஸ்.அருணோதயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வி.எஸ்.மாணிக்கம் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →