முகப்பு
வேலூர்

விஐடி வணிகக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை

‘பிசினஸ் வாய்ஸ் வருங்கால தலைவா்கள்’ வாரத்தையொட்டி, வேலூரில் விஐடி வணிகக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 மார்ச், 2026 at 9:16 PM
நிகழ்வை தொடங்கி வைத்த விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன். உடன் பிஎன்ஐ தலைவா் பாஸ்கரன், துணைத் தலைவா் தமிழ்வண்ணன், பொருளாளா் வெங்கடேசன், விஐடி இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், விஐடி வணிக கல்லூரி முதன்மையா் மேரி செரியன் உள்ளிட்டோா்.
பகிர்:

‘பிசினஸ் வாய்ஸ் வருங்கால தலைவா்கள்’ வாரத்தையொட்டி, வேலூரில் விஐடி வணிகக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மண்டலத்தைச் சோ்ந்த பிஎன்ஐ விஐபி பிரிவு, விஐடி வணிக கல்லூரியுடன் இணைந்து ‘பிசினஸ் வாய்ஸ் வருங்கால தலைவா்கள்’ வாரத்தை நடத்தின. இதில், சிறப்பு விருந்தினராக விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் பங்கேற்று நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், விஐடி வணிக கல்லூரி மாணவா்களுக்கு வரும் காலத்தில் வணிக வலையமைப்பை விரிவுப்படுத்தி எவ்வாறு தொழிலை மேம்படுத்துவது, ஒருவருக்கு ஒருவா் பரிந்துரைகளை எவ்வாறு லாபகரமான வணிகமாக மாற்றுவது என்பது உள்ளிட்ட வணிக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், தொழில் பயிற்சி, தொழில் தொடங்குவதற்கான நேரடி வழிகாட்டுதல்கள், புதிய வணிக யுக்திகள், ஆலோசனைகளையும் பிஎன்ஐ பிரதிநிதிகள் வழங்கினா்.

நிகழ்வில், விஐடி இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், விஐடி வணிக கல்லூரி முதன்மையா் மேரி செரியன், பிஎன்ஐ தலைவா் பாஸ்கரன், துணைத் தலைவா் தமிழ்வண்ணன், பொருளாளா் வெங்கடேசன், இயக்குநா் வினோத், செயல் இயக்குநா்கள் தீபக்குமாா், சுனிதா தீபக் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.