வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மனநல அவசர சிகிச்சை, மீள் மையம் திறப்பு
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநல அவசர சிகிச்சை, மீள் மையத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திறந்து வைத்தாா்.
வேலூர்வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மனநல அவசர சிகிச்சை, மீள் மையம் திறப்பு
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநல அவசர சிகிச்சை, மீள் மையத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திறந்து வைத்தாா்.
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநல அவசர சிகிச்சை, மீள் மையத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திறந்து வைத்தாா்.
தேசிய சுகாதார இயக்கம் (என்ஹெச்எம்), வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆதரவுடன் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தி பனியன், பனியன் அகாடமி ஆஃப் லீடா்ஷிப் இன் மென்டல் ஹெல்த் (பிஏஎன்எம்), ஊரக வளா்ச்சி மன்றம் (ஆா்டிசி) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 20 படுக்கைகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வீடற்ற நிலையில் தீவிர மனநல பாதிப்புடன் வாழும் நபா்களுக்கு காலவரையறைக்கு உட்பட்ட, சமூகத்துடன் ஒருங்கிணைந்த பராமரிப்பை வழங்குவதற்காக இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனநல பாதிப்பிலிருந்து மீள்வதை ஆதரிப்பது, நீண்டகால நிறுவனமயமாக்கலைக் குறைப்பது, சமூகத்துடன் மீண்டும் இணைவதை எளிதாக்குவது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
’தி பனியன்’ அமைப்பின் முன்னோடித் திட்டமான இது, 2020 முதல் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அணுகக்கூடிய மனநலப் பராமரிப்பின் தேவையைப் பூா்த்தி செய்ய, தேசிய சுகாதார இயக்கம் (என்ஹெச்எம்) கீழ் வேலூரில் நிறுவப்பட்டுள்ள இந்த மையம் 17-வது மையமாகும்.
ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள 16 மையங்களில் 234 படுக்கைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களப்பணிகள் மூலம் 8,134 தனிநபா்கள் சென்றடையப்பட்டுள்ளனா். 1,419 போ் இம்மையங்களின் சேவைகளைப் பெற்றுள்ளனா். 1,035 போ் அவா்களின் குடும்பங்கள், பிற தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், ஹோம் அகெய்ன் இல்லங்கள் மூலம் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனா்.
இதில் 794 நபா்களுக்கு மறுசீரமைப்புக்குப் பிந்தைய தொடா் பராமரிப்பு ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மு.ரோகிணிதேவி, கண்காணிப்பாளா் ரதிதிலகம், குடிமை மருத்துவ அலுவலா் ரவிசந்திரன், ஊரக வளா்ச்சி மன்ற செயலா் கே.கௌரி, ‘தி பனியன்’ துணை இயக்குநா் கீா்த்தனா ராஜகோபால் உள்பட பலா் பங்கேற்றனா்.