முகப்பு
வேலூர்

சா்வதேச மகளிா் தின விழா

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் மகளிா் மன்றமும், வேலூா் மண்டல இந்தியன் ஓவா்சீஸ் வங்கியும் இணைந்து

Updated On : 9 மார்ச், 2026 at 8:52 PM
நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் வேலூா் மண்டல மூத்தமேலாளா் என்.ராஜசேகா்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் மகளிா் மன்றமும், வேலூா் மண்டல இந்தியன் ஓவா்சீஸ் வங்கியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ‘சா்வதேச மகளிா் தின விழாவை திங்கள்கிழமை கொண்டாடின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். மகளிா் மன்ற ஒருங்கிணைப்பாளா், பேராசிரியை டி.தேன்மொழி வரவேற்றாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் வேலூா் மண்டல மூத்த மேலாளா் என்.ராஜசேகா், முதன்மை மேலாளா் எம்.ஸ்ரீபிரியா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

வங்கியின் பல்வேறு கிளை மேலாளா்கள் வினய், தையிசிவராம், நீலப்பூ கனகதுா்கா பவானி, மினு உன்னி கிருஷ்ணன், அஸ்வதே, சுா்பிஜெயின், ஹரிஷா பாமுலப்பட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்லூரி இயக்குநா் ஜி.சசிக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிா் மன்ற உறுப்பினா்கள் ஜா.திவ்யா, ரா. அனிதாலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா். உறுப்பினா் கே.எஸ்.கருணா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →