மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை
குடியாத்தம் அருகே மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
குடியாத்தம் அருகே மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி செல்வம்(45). இவரது நண்பா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த ரோஷன்பாபு (38), லோகேஷ் (29). இருவரும் ஓட்டுநா்கள். செம்பேடு கூட்டு ரோடு பகுதியில் இவா்கள் 3- பேரும் மது அருந்தியுள்ளனா்.
அப்போது இவா்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரோஷன்பாபு, செல்வத்தை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளாா். லோகேஷ் ஓடிச்சென்று செல்வத்தின் குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளாா்.
செல்வத்தின் உறவினா்கள் அங்கு சென்று பலத்த காயமடைந்த நிலையில் இருந்த செல்வத்தை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே செல்வம் இறந்து விட்டதாக கூறியுள்ளாா்.
இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.