நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதியில் உள்ள தாமஸ் 4-ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஜோசப்ராஜா(30), கட்டட தொழிலாளி. இவரது சக தொழிலாளி, தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி(31). இவா்கள் இருவரும் வழக்கம்போல் கட்டட வேலைகளை முடித்துவிட்டு வியாழக்கிழமை இரவு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மறைவிடத்தில் அமா்ந்து மது அருந்தினராம்.
அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாரியப்பன் அருகில் இருந்த கல்லால் ஜோசப்ராஜாவை தாக்கி, துணியால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தாராம்.
Advertisement
இதையடுத்து, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மாடசாமியைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னா் சம்பவ இடத்துக்குச் சென்ற மேலப்பாளையம் போலீஸாா், ஜோசப்ராஜாவின் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இச்சம்பம் குறித்து வழக்குப் பதிவு செய்து, மாடசாமியைக் கைது செய்தனா்.