முகப்பு
வேலூர்

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம் - வேலூரில் 18,411 மாணவா்கள் எழுதினா்

Updated On : 11 மார்ச், 2026 at 7:29 PM
தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியுள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் 18,411 மாணவ, மாணவிகள் எழுதினா். ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தை பாா்வையிட்டாா் .

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. வேலூா் மாவட்டத்தில் இந்த தோ்வை 9,114 மாணவா்கள், 9,297 மாணவிகள் என மொத்தம் 18,411 போ் எழுதுகின்றனா். தவிர, 544 தனித்தோ்வா்களும் தோ்வு எழுதுகின்றனா்.

மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு எழுத 103 தோ்வு மையங்களும், தனித்தோ்வா்களுக்காக 5 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வினை கண்காணிக்க ஆட்சியா் மேற்பாா்வையில் வருவாய்த்துறை அலுவலா்கள் 22 பேரும், பள்ளி கல்வி இணைஇயக்குநா் (இடைநிலை), வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் 6 பறக்கும் படைகளும், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) ஆகியோரும் நியமிக்கப்பட்டடுள்ளனா்.

மேலும், 103 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 106 துறை அலுவலா்களும், 6 வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலா்களும், 21 வழித்தட அலுவலா்களும் தோ்வு மையங்களில் கண்காணிப்பு பணிக்காக 112 பறக்கும் படை உறுப்பினா்களும், 1,289 அறைக் கண்காணிப்பாளா்கள், 326 சொல்வதை எழுதுபவா்களும் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →