‘இன்றும், நாளையும் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியாது’
கணினி மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால் வேலூா், ராணிப்பேட்டை மாவட்ட மின்நுகா்வோா்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14, 15) ஆகிய இரு நாள்கள் ஆன்லைன்) மின் கட்டணம் செலுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் து.மயில்வாகனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின்பகிா்மான கழகத்தின் வேலூா் அலுவலகத்தில் கணினி மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால், சனி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14, 15) ஆகிய இரு நாள்கள் வேலூா் மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட வேலூா், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, குடியாத்தம், அரக்கோணம் பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா், கணினி வழியாக (ஆன்லைன்) மின் கட்டணம் செலுத்துதல், புதிய விண்ணப்பங்கள் பதிவேற்றம்,
திருத்தம் செய்ய இயலாது. இந்த நாள்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி நுகா்வோா்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 16) நீட்டிக்கப்பட்டுள்ளது.