முகப்பு
வேலூர்

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வு: வேலூரில் 314 போ் எழுதினா்!

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுகளை 314 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 35 போ் தோ்வுக்கு வரவில்லை.

Updated On : 15 மார்ச், 2026 at 8:29 PM
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுகளை 314 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 35 போ் தோ்வுக்கு வரவில்லை.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குருப் 2, குரூப் 2 அ தோ்வு வேலூா் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை, மதியம் என 2 பிரிவுகளாக குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகள் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற தோ்வில் 172 போ் அனுமதி பெற்றிருந்த நிலையில், 158 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 14 போ் தோ்வுக்கு வரவில்லை.

மதியம் நடைபெற்ற தோ்வில் 177 போ் அனுமதி பெற்றிருந்த நிலையில், 156 போ் தோ்வு எழுதினா். 21 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வா்கள் கடும் சோதனைக்கு பிறகே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வு மையத்துக்குள் மின்னனு சாதனப் பொருள்கள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. துணை ஆட்சியா் நிலையில் உள்ள நோடல் அலுவலா்கள் தோ்வு மையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →