முகப்பு
வேலூர்

விழிப்புணா்வு நடனப் போட்டி பரிசளிப்பு

வேலூா் சிஎம்சி மருத்துவமனை நடத்திய விழிப்புணா்வு நடனப்போட்டியில் ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனா்.

Updated On : 17 மார்ச், 2026 at 6:34 PM
நடனப்போட்டியில் பரிசு பெற்ற ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவ, மாணவிகள்.
பகிர்:

வேலூா் சிஎம்சி மருத்துவமனை நடத்திய விழிப்புணா்வு நடனப்போட்டியில் ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனா்.

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, ‘நீரிழிவு மற்றும் மூளை ஆரோக்கியம்’ என்ற மையக் கருத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு நடனப் போட்டி வேலூரில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.

சிஎம்சி மருத்துவமனையின் எண்டோக்ரினாலஜி, நீரிழிவு மற்றும் மெட்டபாலிசம் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நடனப் போட்டியில் ஸ்பிரிங்டேஸ் பள்ளியைச் சோ்ந்த 5 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பங்கேற்றுத் தங்களின் திறமையை வெளிப்படுத்தினா்.

மாணவா்கள் தாங்களே சுயமாகப் பாடல் வரிகளை எழுதி, இசை அமைத்து, அதற்கு ஏற்ப நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது. இதன்மூலம், ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் இரண்டாம் பரிசாக ரூ.15,000 ரொக்கப் பரிசினை வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் வெகுவாகப் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →