முகப்பு
திருவாரூர்

மத்திய பல்கலை. மாணவா்கள் விழிப்புணா்வு

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

Updated On : 26 மார்ச், 2026 at 12:40 AM
மாணவா்கள் விழிப்புணா்வு
பகிர்:

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன்படி, திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய பல்கலை மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோா், சுய உதவிக்குழுவைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களும் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.