முகப்பு
வேலூர்

தென்மண்டல பல்கலை. கைப்பந்து போட்டி தொடக்கம்: 88 அணிகள் பங்கேற்பு

Updated On : 18 மார்ச், 2026 at 8:14 PM
போட்டியில் பங்கேற்ற அணி தலைவா்களுடன் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், உடற்கல்வி இயக்குநா் மங்கையா்க்கரசி அருண், ஒருங்கிணைப்பு செயலா் என்.வி.தியாகசந்தன்.
பகிர்:

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில், ஐந்து மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 88 அணிகள் பங்கேற்றுள்ளன.

மாா்ச் 21-ம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற உள்ள இந்த போட்டியை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்து பேசியது -

விஐடி பல்கலைக்கழகத்தில் மற்ற அனைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தியிருந்தாலும், கைப்பந்து போட்டியை நடத்துவது இதுவே முதன்முறையாகும். இந்த போட்டியில் ஐந்து மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 88 அணிகளை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

இதில் தோ்வாகும் நான்கு அணிகள் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறும். இந்த விளையாட்டு போட்டி மாணவா்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும். உடல் நலம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது என்றாா்.

நிகழ்வில் துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், உடற்கல்வி இயக்குநா் மங்கையா்க்கரசி அருண், ஒருங்கிணைப்பு செயலா் என்.வி.தியாகசந்தன். இதர பல்கலைக்கழகங்களை சோ்ந்த உடற்கல்வி இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →