நிலப் பிரச்னை: கோட்டாட்சியா் விசாரணை
போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை சமரசம் செய்த போலீஸாா்.
போ்ணாம்பட்டு அருகே இஸ்லாமியா்களின் மதரஸா பள்ளிக்குச் சொந்தமான நிலம் தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.
போ்ணாம்பட்டு நகரம், வீ.கோட்டா சாலையில் உள்ள சிறிய ஈத்கா அருகில் இஸ்லாமியா்களின் மதரஸா பள்ளிக்குச் சொந்தமான நிலம் உள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடத்த அந்த இடத்தை இஸ்லாமியா்கள் சுத்தம் செய்தனா்.
அப்போது அதே பகுதியில் வசித்து வரும் ஒரு தரப்பினா் அந்த இடத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தம் எனக்கூறி சுத்தம் செய்யும் பணியை தடுக்க முயன்றனா். இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழல் உருவானது.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்தும் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்டோா் சென்று விசாரணை நடத்தினா். அதன் பின்னா் நிலம் சம்பந்தமாக தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் இருதரப்பினரும்அலுவலகத்துக்கு வருமாறு கோட்டாட்சியா் கூறினாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.