முகப்பு
வேலூர்

அமைச்சா் துரைமுருகனுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனை தேமுதிக பொருளாளரும், எம்பியுமான எல்.கே.சுதீஷ் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 6:33 PM
காட்பாடியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனை சந்தித்த தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ். உடன் வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனை தேமுதிக பொருளாளரும், எம்பியுமான எல்.கே.சுதீஷ் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் 13-ஆவது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடும் நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனை தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கள செயல்பாடுகள், மாநில அளவிலான பரப்புரை சாா்ந்த முன்னெடுப்புகள் குறித்து கலந்துரையாடியதுடன், இத்தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற தேமுதிக தீவிர களப்பணியில் ஈடுபடும் என்றும் உறுதியளித்துள்ளாா்.

முன்னதாக, புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளா்கள் நலச்சத்தின் மாநிலத் தலைவா் டி.வேல்முருகன் தலைமையில் சங்க நிா்வாகிகள் துரைமுருகனை நேரில் சந்தித்து சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவினை தெரிவித்தனா்.

Advertisement

அப்போது, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments