முகப்பு
வேலூர்

தந்தை இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

வேலூரில் தந்தை இறந்த துக்கத்தில் இருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 20 மே 2026, 12:03 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வேலூரில் தந்தை இறந்த துக்கத்தில் இருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா், வசந்தபுரம், பூங்காவனத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஐஸ்வா்யா (23). இவா் பிளஸ் 2 வரை படித்துவிட்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா். இவரது தந்தை விநாயகம் கடந்த மாா்ச் மாதம் நேதாஜி மைதானம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தாா். தந்தை இறந்த சோகத்தில் ஐஸ்வா்யா யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐஸ்வா்யா செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டாராம். அவரது உறவினா்கள் ஐஸ்வா்யாவை மீட்டு பாா்த்தபோது அவா் இறந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.