கோயம்புத்தூர்

இரவு 9 மணிக்கு மேல் முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குள் வாகனங்கள் இயக்கத் தடை

உதகை ஆக. 10: நீலகிரி மலைப் பாதையில் முதுமலை புலிகள் காப்பக எல்லைப் பகுதிக்குள் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பந்திப்பூர் பகுதியில் இரவு 9

ஏ. பேட்ரிக்

உதகை ஆக. 10: நீலகிரி மலைப் பாதையில் முதுமலை புலிகள் காப்பக எல்லைப் பகுதிக்குள் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பந்திப்பூர் பகுதியில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல கர்நாடக மாநில அரசு தடை விதித்துள்ளது.

 கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையாலேயே இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டு வந்தாலும் இந்த தடையால் தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திற்குள் செல்லும் வாகனங்களும் இரவு 9 மணிக்கு மேல் பயணிக்க

முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

 அத்துடன் தமிழக அரசின் சார்பில் இரண்டு பேருந்துகளும், கர்நாடக அரசின் சார்பில் 2 பேருந்துகளும் மட்டுமே இரவு 9 மணிக்கு மேல் இச்சாலையில் இயக்கப்படுகின்றன. இதனால் இரு மாநில பேருந்து இயக்கத்தில் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

 இந்நிலையில் நீலகிரி மாவட்ட எல்லைக்குட்பட்ட உதகை-மசினகுடி சாலையிலுள்ள கல்லட்டி மற்றும் கூடலூர்-முதுமலை சாலையிலுள்ள தொரப்பள்ளி ஆகிய சோதனைச்சாவடிகளிலும் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கல் நுழையக்கூடாது என்ற புதிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பை கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருமெனவும் அறவிக்கப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக உதகை-மசினகுடி சாலையில் கல்லட்டி சோதனைச் சாவடியை தாண்டியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரவு 9 மணிக்கு மேல் தங்களது வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 அதேபோல, கூடலூர்-முதுமலை சாலையில் தொரப்பள்ளி சோதனைச்சாவடியை தாண்டியுள்ள ஆதிவாசி மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களும் இரவு 9 மணிக்கு மேல் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 நீலகிரியில் புலிகள் காப்பகப் பகுதியில் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குள் செல்லும் வாகனங்கள் மட்டும் இரவு 9 மணிக்கு மேல் காப்பகப் பகுதிக்குள் செல்ல முடியாது என தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் நீலகிரி மாவட்டத்திற்குள்ளேயே இரவு 9 மணிக்கு மேல் வாகனங்களை இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT