கோயம்புத்தூர்

முன்மாதிரியாகத் திகழும் நெலாக்கோட்டை ஊராட்சி

உதகை ஜூலை 9: கூடுதல் வருமானத்துக்கு வழியேயில்லாத சூழலிலும், நெலாக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் மாவட்டத்திலேயே இந்த ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றியுள்ளன.  செவில

ஏ. பேட்ரிக்

உதகை ஜூலை 9: கூடுதல் வருமானத்துக்கு வழியேயில்லாத சூழலிலும், நெலாக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் மாவட்டத்திலேயே இந்த ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றியுள்ளன.

 செவிலயரான இந்த ஊராட்சியின் தலைவி எல்சி மைக்கிள் ஊராட்சித் தலைவியாக மாறிய பின்னரும் நேரம் கிடைத்தால் இலவசமாக பிரசவம் பார்ப்பதையும் சேவையாகந்க் கொண்டுள்ளார்.

 தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய ஊராட்சி நீலகிரி மாவட்டத்தில்

கூடலூரிலுள்ள நெலாக்கோட்டை ஊராட்சியாகும். சுமார் 40,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்த ஊராட்சியில் பழனங்குடியினத்தவர் சுமார் 12,000 பேரும், தாழத்தப்பட்ட மக்கள் 12,000 பேரும் வசிக்கின்றனர்.

 தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகள் பேசக்கூடிய மக்களும் அதிகளவில் இருப்பதால் இது ஒரு சமத்துவ ஊராட்சியாகவும் திகழ்கிறது.

 அதிகளவில் தொகுப்பு வீடுகளே நிறைந்துள்ளதாலும், இப்பகுதியிலுள்ள பெரும்பான்மையான நிலங்கள் பிரிவு 17 வகைக்குட்பட்டவை என்பதாலும் கூடுதல் வருமானத்துக்கு வழியில்லை. ஆனாலும் கிடைக்கும் தொகைகளைக் கொண்டே இந்த ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இப்பகுதியில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த ஊராட்சிக்குட்பட்ட 36 கிராமங்களை ஒன்றிணைத்து கூட்டுக் குடிநீர் திட்டம்

நிறைவேற்றப்பட்டுள்ளது. வட்டக்கொல்லி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரால் இந்த ஊராட்சியில் தற்போது குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

 இந்த ஊராட்சியில் பிரிவு 17 நிலங்களுக்குட்பட்ட பகுதிகளைத்தவிர மற்ற பகுதிகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த ஊராட்சியில் தேசிய வேலை உறுதி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருவதால் தினமும் 400 பேர் பயனடைகின்றனர். இதனால், இந்த ஊராட்சியில் தார் சாலைகள், தடுப்பு சுவர்கள், நீரோடைகள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகளும்

மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 முதிரக்கொல்லி பகுதியிலுள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்ததால் ஊராட்சித் தலைவரான எல்சி மைக்கிள், தானே சம்பளம் கொடுத்து ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளார். இதனால், இப்பகுதியிலுள்ள ஆதிவாசி குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதில்லை.

அதேபோல இங்குள்ள மற்ற பள்ளிகளுக்கும், உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கும் சத்துணவுக்கான உணவுத் தட்டுகள், மாவரைக்கும் எந்திரங்கள், சமையல் பாத்திரங்கள் என, தேவையான உதவிகளையும் செய்து

வருகிறார்.

 பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அந்தந்த பள்ளிகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுவோருக்கு ஊக்கப் பரிசும் கொடுத்து வருகிறார்.

 அடிப்படையில் இவர் ஒரு செவிலியர் என்பதால் ஊராட்சித் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்வரை செவிலியராகவே பணியாற்றியுள்ளார்.

இதன் காரணமாக அவசர காலங்களில் இப்பகுதிகளிலுள்ள பெண்களுக்கு பிரசவம் பார்க்கவும் இவர் தயங்குவதில்லை.

 பெண்கள் மீது இவர் கொண்டுள்ள அன்பின் காரணமாக ஆண்டுதோறும்

 இப்பகுதியிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தனது செலவிலேயே வளைகாப்பு நடத்தி பரிசுகளை வழங்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

 இப்பகுதியில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் புலிகள் காப்பக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இங்குள்ள நிலங்களை விற்கவோ அல்லது வாங்கவோ முடியாத சூழல் உள்ளது.

இப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தமிழக துணை முதல்வர் முதல் தலைமைச்செயலர் வரை அனைத்து அதிகாரிகளையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறார்.

 தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நீலகிரி மாவட்டத்திலுள்ள 35

ஊராட்சிகளில் நெலாக்கோட்டை ஊராட்சிக்கென தனியாக ஒரு இடத்தைப்

பெற்றுள்ள இந்த ஊராட்சித் தலைவி இந்த ஊராட்சியை மட்டுமல்லாமல் ஊராட்சி தலைவருக்கும் ஒரு மதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்குக் காரணம் ஐலேண்டு

அறக்கட்டளை தங்களைப் போன்ற பெண் ஊராட்சி தலைவர்களுக்கு அளித்துவரும் தொடர் பயிற்சியே காரணமெனவும் குறிப்பிடும் இவர், நீலகிரி மாவட்ட பெண் ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பின் தலைவராகவும் செயல்படுகிறார்.

 பொதுவாக பெண் ஊராட்சி தலைவர்கள் என்றாலே குடும்பத்தினரின் தலையீடு இருக்கும், போதிய அனுபவம் இருக்காது என்றெல்லாம் கருதப்படும் நிலையில், எவ்வித பிரச்சினைகளுமின்றி தனது சிறப்பான செயல்பாடுகளால் நெலாக்கோட்டை ஊராட்சி நீலகிரி மாவட்டத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்றால் மிகையல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT