வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஒருவர் கைது
ஈரோடு, ஜன. 8: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவையை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஈரோடு, நாமக்கல், க
கோயம்புத்தூர்வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஒருவர் கைது
ஈரோடு, ஜன. 8: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவையை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஈரோடு, நாமக்கல், க
ஈரோடு, ஜன. 8: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவையை சேர்ந்தவர் சரவணக்குமார்.
இவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஈரோடு, நாமக்கல், கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 பி.எட். பட்டதாரிகளிடம், ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ. 5 லட்சம் வாங்கினாராம்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் போலி நியமன ஆணை அளித்து, மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுமதி என்பவர், ஈரோடு குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸôர் விசாரனை நடத்தி, சரவணக்குமாரை (40) சனிக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.