முகப்பு
கோயம்புத்தூர்

தர்மகிரியில் என்எஸ்எஸ் முகாம்

கூடலூர், ஜன. 8: கூடலூர் அருகேயுள்ள தர்மகிரி கிராமத்தில், ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.   தர்மகிரியில் நடைபெற்ற என்எஸ்எஸ் முகாமில், நாட்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

கூடலூர், ஜன. 8: கூடலூர் அருகேயுள்ள தர்மகிரி கிராமத்தில், ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.

  தர்மகிரியில் நடைபெற்ற என்எஸ்எஸ் முகாமில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ராஜதுரை, தென்றல் கபூர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட தர்மகிரி துவக்கப் பள்ளி வளாகம் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் சுத்தம் செய்யப்பட்டன.

  மன்ற உறுப்பினர்கள் கே.ஏ.பி.பாதுஷா, உன்னிமோன் ஆகியோர், என்எஸ்எஸ் மாணவர்களைப் பாராட்டினர்.

பாஜக தாமரை ரத யாத்திரை

கோத்தகிரி, ஜன. 8: பாரதிய ஜனதா கட்சியின் தாமரை ரத யாத்திரை கோத்தகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

  கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில், யாத்திரையைத் துவக்கி வைத்து பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது (படம்):

  தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி துவக்கப்பட்ட இந்த தாமரை ரத யாத்திரை, 25 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது 26-வது மாவட்டமாக நீலகிரி மாவட்டதுக்கு வந்துள்ளது.

  சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவதுபோல், இந்து சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.

  விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

விலைவாசி உயர்வைக் கட்டுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது என்றார்.

  பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கனகராஜ், நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் மாஸ்டர் மாதன், ராமன், தும்பூர் ஐ.போஜன், அன்பு, குமார், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.