முகப்பு
கோயம்புத்தூர்

படப்பிடிப்புக்கு என்று கூறி 6 மாத பெண் குழந்தை கடத்தல்!

     கோவை, ஜன. 8:  சினிமா படப்பிடிப்புக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்ட 6 மாத பெண் குழந்தையுடன் மாயமான இரண்டு பெண்களை தனிப்படை போலீஸôர்  தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை- திருநக

கோயம்புத்தூர்

படப்பிடிப்புக்கு என்று கூறி 6 மாத பெண் குழந்தை கடத்தல்!

     கோவை, ஜன. 8:  சினிமா படப்பிடிப்புக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்ட 6 மாத பெண் குழந்தையுடன் மாயமான இரண்டு பெண்களை தனிப்படை போலீஸôர்  தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை- திருநக

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

கோவை, ஜன. 8:  சினிமா படப்பிடிப்புக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்ட 6 மாத பெண் குழந்தையுடன் மாயமான இரண்டு பெண்களை தனிப்படை போலீஸôர்  தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை- திருநகர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து- கிருஷ்ணவேணி தம்பதியரின் 6 மாதக் குழந்தை சவுமியா. கடந்த டிச.

31ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரமசிவம் (50) என்பவர் காளிமுத்து தம்பதியரைச் சந்தித்து கேரளா மாநிலம், கொழிஞ்சாம்பாறையில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பிற்கு குழந்தை தேவை என்று கேட்டுப் பெற்றுள்ளனர்.

சவுமியாவின் தாத்தா சுவாமிநாதன், பாட்டி சித்ரா, ஆனைமலை- நெல்குத்திப்பாறை பகுதியைச் சேர்ந்த பானு, ஹைருன்னிஷா, ஆட்டோ டிரைவர் பரமசிவம் ஆகியோர் குழந்தையுடன் கொழிஞ்சாம்பாறை சென்றனர்.

சினிமா படப்பிடிப்புக்கு கொண்டுசென்ற குழந்தை சவுமியா திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளுடன் சென்ற பானு, ஹைருன்னிசாவை காணவில்லை.

எனவே குழந்தையை இவர்கள் இருவரும் கடத்திச் சென்றதாக ஆனைமலை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட குழந்தையை மீட்கவும், கடத்திச் சென்றதாகக் கருதப்படும் பானு, ஹைருன்னிஷவை பிடிக்கவும் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நமசிவாயம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தை கடத்திச் செல்லப்பட்ட இடம் கேரள மாநிலம் என்பதால் பாலக்காடு, கொழிஞ்சாம்பாறை, கொல்லங்கோடு உள்பட சினிமா படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளுக்கு தனிப்படை போலீஸôர் விரைந்துள்ளனர். தலைமறைவான பெண்களை அடையாளம் காட்ட குழந்தையின் தாத்தா, பாட்டி மற்றும் ஆட்டோ டிரைவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.இதனிடையே போலீஸôர் தங்களைத் தேடுவதை அறிந்த ஹைருன்னிஷா கேரள மாநிலம், தத்தமங்கலத்தில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு திருப்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.

 இதனையடுத்து திருப்பூருக்கும் தனிப்படை போலீஸôர் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன குழந்தையையும், மாயமான இரண்டு பெண்களையும், கேரளா மற்றும் தமிழகத்தில் தேடி வருகிறோம்.

 விரைவில் குழந்தை மீட்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →