முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்ட கோகோ போட்டி: 21 மெட்ரிக். பள்ளி அணிகள் பங்கேற்பு

திருப்பூர், ஜன.8: மாவட்ட அளவில் மெட்ரிக். பள்ளிகள் இடையேயான கோகோ போட்டிகள் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.  ஃப்ரண்ட்லைன் அகாதெமி மெட்ரிக். பள்ளி சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாணவர்கள் பிரிவில்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

திருப்பூர், ஜன.8: மாவட்ட அளவில் மெட்ரிக். பள்ளிகள் இடையேயான கோகோ போட்டிகள் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

 ஃப்ரண்ட்லைன் அகாதெமி மெட்ரிக். பள்ளி சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாணவர்கள் பிரிவில் 12 பள்ளி அணிகளும், மாணவியர் பிரிவில் 9 பள்ளி அணிகளும் பங்கேற்றன.

  இதில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவு அரையிறுதி போட்டியில் திருப்பூர் மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக். பள்ளி மற்றும் ஃப்ரண்ட்லைன் அகாதெமி மெட்ரிக். பள்ளி (பி) அணிகள் மோதியதில் 15-10 என்ற செட் கணக்கில் மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக். பள்ளி வெற்றி பெற்றது.

 அதேபோல், ஃப்ரண்ட்லைன் மெட்ரிக். பள்ளி (ஏ) அணியும், நிர்மலா மெட்ரிக். பள்ளி அணியும் மோதியதில் 18-7 என்ற செட் கணக்கில் ஃப்ரண்ட்லைன் மெட்ரிக். பள்ளி (ஏ) அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக். பள்ளி அணியும், ஃப்ரண்ட்லைன் மெட்ரிக். பள்ளி (ஏ) அணியும் மோதுகின்றன.

14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவு அரையிறுதி போட்டியில் திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மெட்ரிக். பள்ளி அணியும் நிர்மலா மெட்ரிக். பள்ளி அணியும் மோதியதில் 10-1 என்ற செட் கணக்கில் ஃப்ரண்ட்லைன் மெட்ரிக். பள்ளி அணி வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் பல்லடம் புளூபேர்டு மெட்ரிக். பள்ளி அணியும், அவிநாசி வெங்கடேஷ்வரா மெட்ரிக். பள்ளி அணியும் மோதியதில் 9-5 என்ற செட் கணக்கில் வெங்கடேஷ்வரா மெட்ரிக். பள்ளி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதன்படி, இறுதிப்போட்டியில் ஃப்ரண்ட்லைன் மெட்ரிக். பள்ளி அணியும், வெங்கடேஷ்வரா மெட்ரிக். பள்ளி அணியும் மோதுகின்றன.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசளிக்கப் பட உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஃப்ரண்ட்லைன் பள்ளி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →