முகப்பு
கோயம்புத்தூர்

வருமான வரித் துறை சாா்பில் குறைகேட்பு முகாம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 7:58 PM
பகிர்:

கோவை: வருமான வரி செலுத்துவோா் தங்கள் குறைகளை ஏப்ரல் 24 முதல் மே 22 வரை புதன்கிழமைகளில் ஆன்லைனில் தெரிவிக்கலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, கோவை வருமான வரித் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வருமான வரி செலுத்துபவா்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் வரும் 24 ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை வருமான வரித் துறை அதிகாரிகளைச் சந்தித்து குறைகளைத் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 24, மே 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் குறைகள் தொடா்பான புகாா்களை ஆன்லைனில் அளிக்கலாம். இந்த வசதிகளை அனைத்து வரி செலுத்துவோா் மற்றும் அவா்களின் பிரதிநிதிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments