கோயம்புத்தூர்

கோவையில் இருந்து ஷீரடி, சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை தொடக்கம்

கோவையில் இருந்து ஷீரடி, சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Din

கோவையில் இருந்து ஷீரடி, சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கோவையில் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, தில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷாா்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினசரி 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி மற்றும் சிங்கப்பூருக்கு இண்டிகோ விமான நிறுவனம் சாா்பில் நேரடி விமான சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை - ஷீரடி விமானம், கோவையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை வழியாக பிற்பகல் 3.10 மணிக்கு ஷீரடியைச் சென்றடைகிறது.

கோவை - சிங்கப்பூா் விமானம், கோவையில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சிங்கப்பூரைச் சென்றடையும். அதேபோல, சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.10 மணிக்கு கோவை வந்தடைகிறது.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதன் தொடக்கவிழாவில் விமான நிலைய இயக்குநா் (பொ) சம்பத்குமாா், பொது மேலாளா் சரவணன், இண்டிகோ விமான நிறுவன மேலாளா் ராகவ் சுவாமிநாதன், பாதுகாப்புத் துறை மேலாளா் விக்னேஷ் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT