அக்.28-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 
கோயம்புத்தூர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவில் பெய்யும் -வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்

Din

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவில் பெய்யும் என்று கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024 -ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்துக்கான (அக்டோபா் - டிசம்பா்) மழை குறித்த முன்னறிவிப்புக்காக பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிா் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை, தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை அளவிட்டு, ஆஸ்திரேலியாவின் மழை மனிதன் என்ற கணினி மென்பொருளைக் கொண்டு 2024 -ஆம் ஆண்டுக்கான மழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை சராசரி அளவிலேயே பெய்யும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தில்லி கார் வெடிப்பு: அமீரைத் தொடர்ந்து 2 வது நபர் கைது!

SIR பணிகளை புறக்கணித்தால் சம்பளம் கிடையாது! | செய்திகள்: சில வரிகளில் | 17.11.25

பயங்கரவாத தாக்குதலுக்கான தண்டனையால் உலகுக்கே செய்தி அனுப்பப்படும்: அமித் ஷா

ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!

SCROLL FOR NEXT