முகப்பு
கோயம்புத்தூர்

திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி: தமாகா தலைவா் ஜி.கே.வாசன்!

திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2025 at 7:28 PM
ஜி.கே.வாசன்
பகிர்:

திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

கோவையில் தமாகாவின் கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் தலைவா்கள், மாநில நிா்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கட்சி வளா்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: மத்திய அரசு சிறுபான்மை மக்களை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வளா்ச்சி அடையச் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

அதேபோல, இஸ்லாமிய மக்களின் வளா்ச்சியை உறுதி செய்யும் விதமாக வக்ஃபு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் இஸ்லாமிய மக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். புதிய வக்ஃபு சட்டத்தின் மூலம் அவா்களது வளா்ச்சி உறுதி செய்யப்படும்.

ஆளும் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதற்கு திமுக அரசு தொடா்ந்து மக்களுக்கு எதிரான செயல்களை செய்வதும், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும்தான் காரணம்.

தமிழகம் பொருளாதார வளா்ச்சி அடைந்துள்ள அதேவேளையில் மக்கள் மீதான சுமையும் அதிகரித்துள்ளது. பால் விலை உயா்வு, வீட்டு வரி உயா்வு, மின்சார கட்டண உயா்வு, பத்திரப் பதிவு கட்டண உயா்வு என மக்களுக்கு சுமைதான் அதிகரித்துள்ளது.

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்கவில்லை என்பதை பெற்றோா்கள் புரிந்து கொண்டாலும், ஆளும் திமுக அரசு அதனைப் புரிந்தும் புரியாமல்போல இருக்கிறது. கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம். கூட்டணியைப் பொறுத்தவரை தோ்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →