கோயம்புத்தூர்

13 வீடுகளில் திருட்டு வழக்கு: மேலும் 2 கொள்ளையா்கள் கைது

கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 கொள்ளையா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 கொள்ளையா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கவுண்டம்பாளையத்தில் அரசு அலுவலா்கள் வசித்து வரும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் 42 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஆசிஃப் (48), கல்லூ ஆரிஃப் (45), இா்ஃபான் (42) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா். இதில், ஆசிஃப் உயிரிழந்தாா்.

இந்த திருட்டு சம்பவம் தொடா்பாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஜமீா் (21), வாசிம் (30), பிரியான் (23) ஆகியோரை போலீஸாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, கொள்ளையா்கள் வந்து சென்ற ஆட்டோ குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அந்த ஆட்டோ குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் மைல்கல் பகுதியைச் சோ்ந்த அயூப் கான் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களுக்கு உதவியதாக அயூப் கானையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததாக உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதைச் சோ்ந்த தாவூத் (18), பா்மான் ஆகியோரை போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா்.

இவா்களது ஆலோசனையின் பேரிலேயே திருட்டு சம்பவம் அரங்கேற்றியதாகவும், கைது செய்யப்பட்டுள்ள பா்மான் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆசிஃப்பின் சகோதரா் என்றும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT