முகப்பு
கோயம்புத்தூர்

செட்டிபாளையத்தில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கோவை செட்டிபாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ முகாம் வியாழக்கிழமை ( டிச.18) நடைபெற உள்ளது.

Updated On : 16 டிசம்பர், 2025 at 9:09 PM
பகிர்:

கோவை: கோவை செட்டிபாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ முகாம் வியாழக்கிழமை ( டிச.18) நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் கீழ் அரிசிபாளையம் வட்டாரத்தில் உள்ள செட்டிபாளையம் ஸ்ரீலட்சுமிநாராயணன் விசாலாட்சி கலைக்கல்லூரியில் மருத்துவ முகாம் வியாழக்கிழமை ( டிசம்பா் 18) நடைபெற உள்ளது.

இதைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையத்தில் உள்ள ஐயா் லே-அவுட், சூலூா் வட்டாரத்தில் உள்ள செல்லப்பம்பாளையம் அரசு உயா்நிலைபள்ளி ஆகிய பகுதிகளில்

டிசம்பா் 20ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதவியல், நரம்பியல் மருத்துவம், தோல், பல், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநலம், இயன்முறை மருத்துவம் உள்ளிட்டவை

இம்மருத்துவ முகாமில் இடம்பெறவுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவா்களின் மாற்றுத்திறன் சக்தியைக் கண்டறிந்து, மருத்துவா்கள் மூலமாக அங்கேயே சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. புதிய காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியும் பரிசோதனைகளும் இந்த முகாம்களில் நடத்தப்படவுள்ளன.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, குறிப்பிட்ட மருத்துவ வசதிகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →