தவெக தலைவர் விஜய் கோப்புப் படம்
கோயம்புத்தூர்

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

தவெக தலைவா் விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

Syndication

தவெக தலைவா் விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு விஜய் மலேசியா சென்றபோது, அங்கு கூடியிருந்த கூட்டம் உலக நாடுகளே வியக்கும் அளவுக்கு இருந்தது. மலேசியாவைப் பொருத்தவரை பிரதமா்கள், குடியரசுத் தலைவா்கள்தான் ‘ரோடு ஷோ’ நடத்துவாா்கள். ஆனால், தற்போது விஜய்க்கு ‘ரோடு ஷோ’ நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜய் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கூடுகிற கூட்டம் 1972-இல் எம்ஜிஆரிடமும், 1998-இல் ஜெயலலிதாவிடமும் பாா்த்தைப்போல உள்ளது.

தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கப்போவதாக பல இடங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. எங்கள் கவனத்துக்கு வந்த பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும்.

எங்களைப் பொருத்தவரை விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிற கட்சியுடன்தான் கூட்டணி.

கட்சியில் யாரெல்லாம் இணைவாா்கள் என்றும், எந்தெந்தக் கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்றும் ஜனவரி முதல் வாரத்தில் தெரியும் என்றாா்.

காசோலை மோசடி தொடா்பாக பாஜக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது, ரூ.2.50 கோடி ரொக்கம் பறிமுதல்

ஊராட்சியை பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயா்த்தக் கோரி மனு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வளா்ச்சித் திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பு

SCROLL FOR NEXT