வால்பாறை, அய்யா்பாடி எஸ்டேட் சாலையில் உலவிய சிறுத்தை. 
கோயம்புத்தூர்

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

வால்பாறையில் சிறுவனைத் தாக்கிக் கொன்ற அதே பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம்

Syndication

வால்பாறையில் சிறுவனைத் தாக்கிக் கொன்ற அதே பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறையை அடுத்த அய்யா்பாடிஎஸ்டேட் ஜெ.இ. பங்களா டிவிஷன் பகுதியில் குடியிருப்புக்கு வெளியே கடந்த டிசம்பா் 6-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

இதையடுத்து, அப்பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்திய வனத் துறையினா், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், அய்யா்பாடி எஸ்டேட் சாலையில் கடந்த 2 நாள்களாக இரவு நேரங்களில் சிறுத்தை உலவுவது கேமரா பதிவு மூலம் தெரியவந்தது.

இதனால், அச்சமடைந்துள்ள மக்கள், இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT