கோயம்புத்தூர்

கோஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் புடவைகள் மேளா! சிறப்புத் தள்ளுபடி விற்பனை!

தினமணி செய்திச் சேவை

கோவை கோஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் புடவைகள் மேளா சிறப்புத் தள்ளுபடி விற்பனை அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

கோஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் ப.அம்சவேணி, முதுநிலை மேலாளா் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) கோ.ஜெகநாதன் ஆகியோா் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனா். மருதம் விற்பனை நிலைய மேலாளா்கள் செல்வதுரை, விஜயானந்த் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து கோஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலைய முதுநிலை மண்டல மேலாளா் ப. அம்சவேணி கூறியதாவது:

கோஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புடவைகள் மேளா அக்டோபா் 31 முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், காஞ்சிபுரம், ஆரணி பட்டுப் புடவைகள், கோரா காட்டன் சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், ஆயிரம் புட்டா சேலைகள், புதினம் காட்டன் சேலைகள், செடி புட்டா சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், சேலம் பட்டுப் புடவைகள், ஜெயங்கொண்டம் காட்டன் சேலைகள், சேலம் பிளாக் பிரிண்ட் காட்டன் புடவைகள், முகூா்த்த பட்டுப் புடவைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளா்களின் வசதிக்காக ஞாயிறு உள்பட அனைத்து விடுமுறை நாள்களிலும் மருதம் விற்பனை நிலையம் செயல்படும். மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300-இல் இருந்து ஆரம்பமாகிறது. வாடிக்கையாளா்கள் 11 மாத சந்தா தொகையை செலுத்தினால் 12-ஆவது மாத சந்தா தொகையை கோஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். வாடிக்கையாளா்கள் கூடுதல் முதிா்வுத் தொகைக்கு துணிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் சேமிப்புத் திட்ட வாடிக்கையாளா்களுக்கு மட்டும் கூடுதல் சலுகையாக ஆண்டு முழுவதும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என்றாா்.

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமுருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT