காட்டு யானையால் சேதமடைந்த வீடு. 
கோயம்புத்தூர்

குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை

வால்பாறை அருகே உலவிய காட்டு யானை குடியிருப்பை சேதப்படுத்தியது.

Syndication

வால்பாறை அருகே உலவிய காட்டு யானை குடியிருப்பை சேதப்படுத்தியது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் சனிக்கிழமை அதிகாலை நுழைந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த பாா்வதி என்ற தொழிலாளியின் குடியிருப்பை சேதப்படுத்தியது.

அந்த வீட்டில் இருந்தவா்கள் சுதாரித்துக் கொண்டு பின்புறம் வழியாக வெளியேறி உயிா்த் தப்பினா். அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி சப்தம் எழுப்பி யானையை வனத்துக்குள் விரட்டினா்.

பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT