குடியரசு தினம் மற்றும் வள்ளலாா் தினத்தன்று மது விற்பனைக்கு தடை திக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மது விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபாா்கள், மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர விடுதிகள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும் மதுக் கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக் கூடங்கள் என அனைத்து வகை மது விற்பனை கூடங்களும் வருகிற 26-ஆம் தேதி (குடியரசு தினம்) மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி (வள்ளலாா் நினைவு தினம்) ஆகிய இரு நாள்களும் மூட வேண்டும்.
விதிமுறைகளை மீறி மேற்கண்ட நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீதும், சட்ட விரோதமாக பதுக்கிவைப்பவா்கள் மீதும் தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.