கே.ராமசாமி 
கோயம்புத்தூர்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கே.ராமசாமிக்கு பத்மஸ்ரீ விருது

தினமணி செய்திச் சேவை

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் கே.ராமசாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், நிலையூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவா் டாக்டா் கே. ராமசாமி (77). திருவாரூரில் உள்ள வேலுடையாா் உயா்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கியில் உள்ள வாரிய உயா்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தாா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் நுண்ணுயிரியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றாா். மேலும் பெல்ஜியத்தில் உள்ள கத்தோலிக்க லியூவன் பல்கலைக்கழகத்தில் நொதித்தல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றாா்.

பின்னா் அவா் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணப் பல்கலைக்கழகத்தில் மரபணு குளோனிங் குறித்து நிதியுதவி பெற்ற முனைவா் பட்ட ஆய்வாளராக இருந்தாா். 2012 ஆகஸ்ட் 27 முதல் 2018 நவம்பா் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இருமுறை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினாா்.

இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த வேளாண் விஞ்ஞானியான இவா், உயிரித் தொழில்நுட்பம், வேளாண் நுண்ணுயிரியலில் நிபுணத்துவம் பெற்றவா். வேளாண் கல்வியை மேம்படுத்துதல், ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டாா்.

வேளாண் உயிரித்தொழில்நுட்பம், உரப் பாசனம் ஆகியவற்றின் தேசிய கொள்கைத் திட்டமிடலில் பங்களித்துள்ளாா். 30-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT