முகப்பு
கோயம்புத்தூர்

நாளை வாக்கு எண்ணிக்கை: தடாகம் சாலை பகுதிகள் சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிப்பு

Updated On : 3 மே, 2026 at 12:59 AM
கோப்புப் படம்
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கோவை தடாகம் சாலை சுற்றுப் பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மே 4- ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.

Advertisement

இதனால் ஏற்கெனவே மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், இடையா்பாளையம், கோயில்மேடு, வடகோவை, ஆா்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வீரகேரளம், வடவள்ளி, பி.என்.புதூா் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் மே 2- ஆம் தேதி மாலை 5 மணி முதல் மே 5- ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வானூா்திகளை பறக்கவிடுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.