கோயம்புத்தூர்

விதிகளை மீறி கட்டப்படும் கல்வி நிறுவன கட்டடங்கள்!

கோவையில் அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என உள்ளூர் திட்டக் குழுமம் எச்சரிக்கை விடுத்த நிலையில்,

ஆர். ஆதித்தன்

கோவையில் அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என உள்ளூர் திட்டக் குழுமம் எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது கல்வி நிறுவனங்கள் திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிக எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான கலை அறிவியல் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும், மேலாண்மைக் கல்லூரிகளும் உள்ளன.

இதில் கோவையில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்கள்கூட திட்ட அனுமதி பெறாமல் கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

புற்றீசல் போல பெருகிவிட்ட கல்வி நிறுவனங்கள் பலவும் கட்டுமானங்களுக்கு உரிய அனுமதி பெறாமல் கட்டியிருப்பதாகவும், திட்ட அனுமதிக்கு மாறாக கட்டடங்களை கட்டியுள்ளதாகவும் உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நகர ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 49-ன்படி நில அபிவிருத்தி, கட்டட அபிவிருத்தி செய்ய முனைபவர்கள் தொடர்புடைய திட்டக் குழுமத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பித்து திட்ட அனுமதி பெற்றுக் கொள்ளாத அல்லது பெறப்பட்ட அனுமதிக்கு மாறாக அபிவிருத்தி செய்த கட்டுமானங்களை உரிய அறிவிப்பு வழங்கி முன்னர் இருந்த நிலைக்கு கொண்டு வரவோ அல்லது திட்ட அனுமதியின்படி திருத்தியமைக்கவோ, நகர ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57ல் திட்டக் குழுமங்களுக்கு தற்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் திட்டக் குழும பகுதிக்கு உள்பட்ட திட்ட அனுமதி பெறாத கல்வி நிறுவனங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி, திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

நகர ஊரமைப்புத் திருத்தச் சட்டம் 1971 பிரிவு 56, 57 ஆகியவை மூலம் கல்வி நிறுவனங்களை மூடி முத்திரையிடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உள்ளூர் திட்டக் குழுமம் எச்சரிக்கை விடுத்த பிறகு விழித்துக் கொண்ட கல்வி நிறுவனங்கள், தற்போது அவசர கதியில் திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன.

அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி விதிமுறைகளை வகுத்தாலும், தனியார் கல்வி நிறுவனங்கள் விதிகளை காற்றில் பறக்க விடுவது தொடர் கதையாகிவிட்டதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT