கோயம்புத்தூர்

3-ஆவது நாளாகத் தொடரும் மருத்துவர்கள் போராட்டம்

DIN

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தொடர்ந்து 3-ஆவது நாளாக கோவை அரசு மருத்துவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மூன்றாவது நாளாக சனிக்கிழமை பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மருத்துவமனைக்கு வந்த வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT