கோயம்புத்தூர்

தாற்காலிக கணினி பதிவேற்றுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

கோவை மாவட்ட  வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள கணினி பதிவேற்றுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டத்தின்கீழ் ஓராண்டு தாற்காலிக அடிப்படையில் கணினி பதிவேற்றுநர் பணியிடத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தகுதியான நபர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 
இந்தப் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்யும் நபர்களைத் தவிர கோவை மாவட்டத்தில் வசிக்கும் நபர்கள் வயது,  கல்வி மற்றும் சாதிச் சான்றுகளுடன் உதவி இயக்குநர்,  மாவட்ட நில அளவை அலுவலகம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை-18 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி,  தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்ச்சி,  கணினி இயக்குவதற்கான அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.  மேலும் 2017 ஜூலை 1-ஆம் தேதி 32 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். 
இப்பணிக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ.7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT