கோயம்புத்தூர்

மேம்பட்ட கல்வி நிறுவனத்துக்கான ரூ. 1,000 கோடி நிதியுதவி: பாரதியார் பல்கலை. விண்ணப்பிப்பு

DIN

மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத்துக்கான (இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்) ரூ. 1,000 கோடி நிதியுதவியைப் பெறுவதற்கு பாரதியார் பல்கலைக்கழகம் விண்ணப்பித்துள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழக துணை வேந்தர் ஆ.கணபதி கூறியிருப்பதாவது:
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் முக்கியமான இடங்களைப் பெற முடியாத நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக தேசியத் தரமதிப்பீட்டில் (என்.ஐ.ஆர்.எஃப்.) முதல் 50 இடங்களுக்குள் வரக் கூடிய இந்தியாவைச் சேர்ந்த தலா 10 அரசு, தனியார் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து, ஆண்டுக்கு ரூ. 200 கோடி வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 1,000 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்க உள்ளது.
இதன் மூலமாக அந்தக் கல்வி நிறுவனத்தை உலகத் தரத்துக்கு உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த நிதியுதவியைப் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் சுயாட்சி உரிமை அளிக்கப்பட்டு, அவர்கள் எந்தத் தடையுமின்றி கல்வி, ஆராய்ச்சிப் பணிகளில் சுதந்திரமாகச் செயல்பட அதிகாரம் வழங்கப்படும்.
தமிழகத்தில் இருந்து இந்த நிதியுதவியைப் பெறுவதற்காக பாரதியார் பல்கலைக்கழகத்தைத் தவிர, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்,  அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவை விண்ணப்பித்துள்ளன. பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த 2016-ஆம் ஆண்டின் தர மதிப்பீட்டில் 14-ஆவது இடத்தையும், 2017-ஆம் ஆண்டின் தர மதிப்பீட்டில் 28-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
எனவே, இந்தத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியைப் பெற்றுள்ள நிலையில், அதற்கான ஆவணங்களைத் தயாரித்து விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை (டிசம்பர் 11) அனைத்து விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தொகை கிடைக்கப் பெறுமானால் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர் பணியிடங்களுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும் வாய்ப்பும், ஏராளமான துறைகளில் ஆராய்ச்சி, கட்டுரைகள் வெளியிடுவதையும் மேற்கொள்ள முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT