கோயம்புத்தூர்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் உள்ள கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 கோவை காந்தி பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தசரதன்,  மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்,  கோயில் வருமானத்தை கோயிலுக்கே செலவிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள் பல ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.
இந்து முன்னணியின் மாநிலச் செயலர் ஜே.எஸ்.கிஷோர்குமார்,  மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலன்,  மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், ஆறுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமையில் வால்பாறையிலும்,   மாவட்டத்  தலைவர் கே.டி. சிவப்புகழ் தலைமையில் மேட்டுப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT