கோயம்புத்தூர்

புதிய பேருந்து வழித்தடம்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் தொடக்கிவைத்தார்

தினமணி

பொள்ளாச்சியை அடுத்த செங்குட்டுபாளையம் கிராமத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் இயக்கிவைத்தார்.
 செங்குட்டுபாளையம் கிராமத்துக்குப் போதிய பேருந்து வசதி இல்லை எனக் கூறி, புதிதாகப் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு அந்த ஊர் மக்கள் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனிடம் முறையிட்டிருந்தனர்.
 இதையடுத்து, செங்குட்டுபாளையம் கிராமத்திலிருந்து தினமும் கிணத்துக்கடவுக்கு 5 முறையும், பொள்ளாச்சி க்கு 7 முறையும் இயக்கப்படும் வகையில் புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை பொள்ளாச்சி ஜெயராமன் திங்கள்கிழமை இயக்கிவைத்தார்.
 இதன் மூலம், செங்குட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்பவர்கள், பொள்ளாச்சிக்கு வராமலேயே கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு செல்ல முடியும்.
 இந்நிகழ்வில், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் பாலசுப்ரமணியம், பொள்ளாச்சிக் கிளை மேலாளர் வெங்கடேஷ்வரன், அதிமுக நிர்வாகிகள் முருகேஷ், தனசேகர், சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT