கோயம்புத்தூர்

சத்துணவு ஊழியர்கள் 2-ஆவது நாளாக மறியல்

DIN

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 325 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.இன்னாசிமுத்து தலைமை வகித்தார். இதில், கடந்த 33 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 1,500 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, வரையறுக்கப்பட்ட மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக ரூ. 3,500 வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக் கொடையாக ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 300 பெண்கள் உள்ளிட்ட 325 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT