கோயம்புத்தூர்

அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளுவதாகப் புகார்

DIN

அன்னூர் அருகே உள்ள குளத்தில் அனுமதியின்றி இரவு நேரத்தில் மண் அள்ளுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அன்னூர் பேரூராட்சி, குமாரபாளையத்தில் சொக்கம்பாளையம் செல்லும் வழியில் பேரூராட்சிக்கு சொந்தமான மயானத்துடன் கூடிய குளம் உள்ளது. இந்தக் குளத்தில் உரிய அனுமதியின்றி இரவு நேரத்தில் லாரிகள் மூலமாக மண் அள்ளப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும், மீண்டும் மண் அள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT