கோயம்புத்தூர்

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

DIN

பவானியை அடுத்த சித்தோடு, ராயபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 105 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.  
 இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான கே.சி.பழனிசாமி தலைமை வகித்தார். ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வகுமார சின்னையன், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் ஜெ.பிரபாகரன் வரவேற்றார்.
 இப்பள்ளியில் 105 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை ஈரோடு மேற்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.வி.இராமலிங்கம் வழங்கினார். தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கு.சிவசங்கர், முன்னாள் மண்டலத் தலைவர்கள் கேசவமூர்த்தி, மனோகரன், முனியப்பன், எவலமலை கூட்டுறவு கட்டடக் கடன் சங்கத் தலைவர் எஸ்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT