முகப்பு
கோயம்புத்தூர்

5 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை செல்வபுரம் ஐயூடிபி காலனியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஆனந்தன் (30). இவரது நண்பர் எஸ்.செல்வராஜ் (37). ஆனந்தன் பயணிகள் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், செப்டம்பர் 22-ஆம்  தேதி ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.  இது குறித்து செல்வபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சி.சூர்யா (20), விக்னேஷ்குமார் (22),ஆர். சூர்யா (20), மோகன் ராஜ் (27) மற்றும் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜய்ராஜ் (22) ஆகியோரைக் கைது செய்தனர். இ தில்  விஜயராஜ் சென்னை புழல் சிறையிலும், மற்ற நான்கு பேரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைதான 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் புதன்கிழமை உத்தரவிட்டார். கோவை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 71 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →