கோயம்புத்தூர்

அளவுக்கு அதிகமான நகைகளை எடுத்து வந்த விமானப் பயணிகளுக்கு அபராதம்

DIN

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் அளவுக்கு அதிகமான  நகைகளைக் கொண்டு வந்த 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொழும்புவில் இருந்து கோவை வரும்  விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு கொழும்புவில் இருந்து  செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த விமானப் பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது,  இலங்கையைச் சேர்ந்த நான்கு  பேர் தங்களது பைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 1.7 கிலோ  தங்க நகைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது.  இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் அவர்கள் நான்கு பேருக்கும் அபராதம் விதித்தனர். அந்தத் தொகையை அவர்கள் செலுத்தியதை அடுத்து அவர்களிடம்  நகைகள் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT